தேனி நவ, 5
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையிலும் மாவட்டசுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் போஸ்கோ ராஜா முன்னிலையிலும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை கொண்டாடும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 29.10.2022 அன்று பொது சுகாதாரத் துறையில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றன அன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்.
மேலும் பொது சுகாதார துறையில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.இவ்விழாவில் மக்கள் நல்வாழ்வு துறையைச் சேர்ந்த தேனி மாவட்டத்தில் உள்ள உயர் அலுவலர்களும், துறை சார்ந்த உயர் அலுவலர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.மேலும் செய்திகளை படிக்க..