தேனி நவ, 6
தேனி அருகே கொடுவிலார்பட்டி பகுதியில் அதிக அளவு விவசாயம் நடைபெறும் பகுதியாக உள்ளது.மேலும் இப்பகுதிகளில் மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, அரளி பூ மற்றும் மலர் விவசாயம் அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் விளைவிக்கப்படும் பூக்கள் அனைத்தும் தேனி மார்க்கெட்டுக்கு அனுப்பப்படுகிறது. சில தினங்களில் பூக்களுக்கு சரியான விலை கிடைக்கிறது என்றும் மற்ற நேரங்களில் விலை கிடைக்காததால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.இதனால் இப்பகுதியில் பூக்கள் மூலம் தயாரிக்கப்படும் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.