தேனி அக், 31
தேனி அருகே அரண்மனைப்புதூர் ,கோட்டைப்பட்டி ,வீர சின்னம்மாள்புரம், கருவேல்நாயக்கன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கரும்பு, நெல் மக்காச்சோளம் அதிகளவு சாகுபடி செய்வது வழக்கம்.
தற்பொழுது சாம்பார் வெள்ளரி கேரளா மற்றும் அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதனாலும் கிலோ இருபது ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாலும் தங்களுக்கு லாபம் கிடைக்கிறது என்று அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தெரிவித்தனர்.