தேனி அக், 29
தேனி அருகே உள்ள அம்பாசமுத்திரம் கோவிந்தநகரம், கண்டமனூர் வேலாயுதாபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி விவசாயிகள் தற்பொழுது சீனி அவரைக்காய் அதிகளவு சாகுபடி செய்து வருகின்றனர். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பெய்த மழையினால் சீனி அவரைக்காய் அதிகளவு சாகுபடியில் விளைச்சல் வந்தது.
மேலும் தற்பொழுது ஒரு கிலோ சீனி அவரைக்காய் நாற்பது ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதால் தங்களுக்கு லாபம் கிடைப்பதாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியுன் தெரிவித்தனர்.