ஊட்டி நவ, 4
நீலகிரியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரு வாரம் தங்கி பேரிடர் பகுதிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், அரக்கோணத்தில் இருந்து ஆய்வாளர்கள் ஹரிதேவ் பண்டார், அருண்ரத்தோர் ஆகியோர் தலைமையிலான தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஊட்டி வந்தனர். ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) தனப்பிரியாவை சந்தித்தனர்.
இப்படையினர் இரு வாரம் தங்கி ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் தாலுகா பகுதிகளில் பொதுமக்களிடையே சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். பேரிடர் பகுதிகளை பார்வையிட்டு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளனர்.