ஊட்டி நவ, 3
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என சட்சபையில் அறிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் 63 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 3,415 மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருகிறார்கள். இத்திட்டத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை மற்றும் உணவுப்பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளின் மூலம் ஒருங்கிணைப்பு பணிகள் செய்யப்படுகிறது.
இத்திட்டம் குறித்து ஆசிரியை ஒருவர் கூறுகையில்,
நான் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீமதுரை துவக்க பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இத்திட்டம், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவருக்கும்வரவேற்க தக்க ஒரு திட்டமாகும். இத்திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தியதால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்திய முதலமைச்சருக்கு எனது சார்பாகவும், பள்ளி சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.