புதுடெல்லி நவ, 3
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், அவதார் 2 டிசம்பர் 16 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.காடுகளை தொடர்ந்து தண்ணீரை பற்றிய படமாக இந்த படம் உருவாகியுள்ளது
இந்நிலையில்,’ அவதார்: தி வே ஆப் வாட்டர்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. ஆச்சரியப்படுத்தும் கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட இந்த டிரைலர் ரசிர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.