சென்னை நவ, 1
தமிழில் கடல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். ரங்கூன், முத்துராமலிங்கம், இவன் தந்திரன், மிஸ்டர் சந்திரமவுலி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவரும், நடிகை மஞ்சிமா மோகனும், ‘தேவராட்டம்’ படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் வந்தன. அச்சம் என்பது மடமையடா, துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர். உள்ளிட்ட படங்களிலும் மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். காதல் குறித்து இருவரும் பதில் சொல்லாமல் இருந்தனர்.
இந்த நிலையில் மஞ்சிமா மோகனுடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கவுதம் கார்த்திக் நேற்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தி உள்ளார்.