திருவள்ளூர் நவ, 1
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. பின்னர் மாலை முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. இது விடிய விடிய நீடித்தது. பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதியில் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்குன்றத்தில் 12.7 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதேபோல் கும்மிடிப்பூண்டி, பொன்னேரியில் 10 செ.மீ மழை பெய்துள்ளது.