ராஜபாளையம் நவ, 1
ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியனார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. தங்கப்பாண்டியன் சட்ட மன்ற உறுப்பினர் தலைமை தாங்கினார். யூனியன் நகர் மன்ற தலைவர் சிங்கராஜ், நகர்மன்ற தலைவி பவித்ரா சியாம்ராஜா கலந்து கொண்டு வேலை வாய்ப்பு முகாமில் கலந்து தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினர்.
இந்த நிகழ்வில் திட்ட இயக்குநர் தெய்வேந்திரன், உதவி திட்ட அலுவலர் ஜேரோம், திமுக. நகர செயலாளர் மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.