விருதுநகர் அக், 28
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற 30 ம் தேதியன்று தேவர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார்.
இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் திருச்சுழி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காவல் தலைமை அதிகாரி பொன்னி தலைமை தாங்கினார். இதில் திருச்சுழி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன், ஆய்வாளர் விஜயகாண்டிபன், ராம்நாராயணன் மற்றும் பல்வேறு காவல் நிலைய துணை ஆய்வாளர் உள்பட ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.