தருமபுரி அக், 28
பாலக்கோடு தக்காளி மார்கெட்டிற்கு தினந்தோறும் 400 டன் அளவிற்கு தக்காளி வரத்து உள்ளது.
இச்சந்தையில் இருந்து தேனி, திண்டுக்கல், சேலம் , ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இப்பகுதியில் பருவமழை பொழிவினால் தக்காளி விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு 2 மாதத்திற்கு பிறகு தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிந்த தக்காளி 10 ரூபாய்க்கு கீழ் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்ற வாரங்களில் கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனையான தக்காளி தற்போது கொள்முதல் விலை 8 ரூபாய் ஆகவும் சில்லரை விற்பனை விலை 20 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் தக்காளி பதப்படுத்தும் கிடங்கை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.