தருமபுரி அக், 30
நாடு முழுவதும் வாகனங் களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டு விபத்து களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து போக்கு வரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு அதிரடியாக உயர்த்தியது.
இதனை தமிழகத்தில் அமல்படுத்து வது தொடர்பான அரசாணையை கடந்த வாரம் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து வாகன ஓட்டிகள் சிலர் மட்டும் ஹெல்மெட் அணிந்தவாறு வாகனங்களை ஓட்டு வருகின்றனர். நிறைய வாகன ஓட்டிகள் தமிழக அரசின் புதிய அரசாணையை கடைப்பிடிக்காமல் செல்வதால் அவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தருமபுரி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், சின்னசாமி மற்றும் ரகுநாத், உள்ளிட்டோர் விதிமீறல் அபராத தொகையின் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடத்தில் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.