தர்மபுரி அக், 27
தர்மபுரி மாவட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி நூற்றாண்டு விழா ஜோதியை வரவேற்று மருத்துவத்துறையில் சிறப்பாக சேவை ஆற்றிய சிறந்த அலுவலர்கள் மற்றும் செவிலியர்களை பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சிவக்குமார், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, தர்மபுரி அரசு மருத்துவமனை குழந்தைகள் நல தலைமை மருத்துவர் ரமேஷ்பாபு, அரூர் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணா, மகப்பேறு தலைமை மருத்துவர் மலர்விழி, பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன், தீர்த்தமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் தொல்காப்பியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.