Spread the love

கன்னியாகுமரி அக், 26

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மத்திகோடு ஊராட்சியில் உள்ள மணலிக்காடு சி.எஸ்.ஐ. ஆலயம் முதல் முத்திரங்குளம் செல்லும் சாலை செப்பனிட்டு பல வருடங்கள் ஆகியதாலும் கடந்த வருடம் பெய்த பெரும் கனமழையினாலும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் இந்த சாலையில் பொதுமக்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ் குமாரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மணலிக்காடு சி.எஸ்.ஐ ஆலயம் முதல் முத்திரங்குளம் செல்லும் சாலையில் காங்கிரீட் தளம் அமைத்து சீரமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். தொடர்ந்து சாலையில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் முடிவடந்ததையடுத்து கிள்ளியூர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் இந்த சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திகோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் மரிய அருள் தாஸ், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஜோபி, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஆசீர் பிறைட் சிங், கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் பொதுச்செயலாளர் எட்வின் ஜோஸ் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *