தர்மபுரி ஆகஸ்ட், 5
பாப்பிரெட்டிபட்டி அடுத்த பையர்நத்தம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குருமன்ஸ் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு அன்று பாரம்பரிய விழா நடத்துவது வழக்கம்.
இந்த பாரம்பரிய விழாவில் ராஜகுலம், சாமந்தி குலம், எருமைக்குலம், வண்டிகாரன் குலம் உள்ளிட்ட குலங்களை சேர்ந்தவர்கள் அவர்களது குல தெய்வமாக வழிபடும் வீரபத்திரன் சாமிக்கு ஆடி முதல் நாளில் இருந்து வருகிற 18-ம் தேதி வரை விரதம் இருந்து விழா நடத்தினர். இந்த விழாவில் குருமன்ஸ் இன மக்கள் அனைத்து குல உறவினர்களும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து கலந்து கொண்டு காவல் தெய்வம் வீரபத்திரன் சாமியை ஊர்வலமாக எடுத்து சென்று சிறப்பு பூஜை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தலையில் தேங்காய் உடைத்து படையல் வைத்து சிறப்பு பூஜை செய்த பின்பு அனைத்து பக்தர்களும், அகோ வீரபத்திர என துள்ளி குதித்து வந்து, தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு நடத்தினர்.
மேலும் பக்தர்கள் சாட்டையடி வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாட்டையால் அடிவாங்கினால் குலம் சிறப்பாக இருக்கும் என பொதுமக்கள் சாட்டையடி வாங்கினர். இந்த குருமன்ஸ் பழங்குடியின பாரம்பரிய திருவிழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க..
http://www.vanakambharatham24x7news.in