Spread the love

நீலகிரி அக், 22

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக் காட்சி முனை, கேத்ரின் நீர்வீழ்ச்சி, முதுமலை புலிகள் காப்பகம் என பல்வேறு சுற்றுலா தலங்கள் நிறைந்து காணப்படுகிறது.

சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும், இங்கு நிலவும் சிதோஷ்ண நிலை மற்றும் நீலகிரியின் இயற்கை அழகினை ரசிக்கவும் தினந்தோறும் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர். குறிப்பாக கோடை காலங்களான ஏப்ரல், மே மாதத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடைவிழாக்களும் நடத்தப்படும்.

தற்போது நீலகிரியில் 2ம் சுற்றுலா சீசன் துவங்க இருப்பதாலும், தொடர்ந்து பண்டிகை விடுமுறைகள் வரவிருப்பதாலும் தோட்டக்கலத்துறை சார்பில் பூங்காக்களில் பராமரிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோத்தகிரி நேரு பூங்காவில் மதில் சுவர் மற்றும் நடைபாதை பராமரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வண்ண மலர்களின் நாற்றுகள் நடவும் பணியும் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *