புதுச்சேரி அக், 18
புதுச்சேரியில் நடைபெற்ற மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விழாவில், புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது,
“புதுச்சேரியில் தமிழில் மருத்துவக் கல்வியை கொண்டு வர முதலமைச்சர் ரங்கசாமியுடன் ஆலோசனை செய்து குழு அமைக்கப்பட்டு, மத்திய பிரதேசத்தில் அவர்கள் மொழியில் மருத்துவக் கல்வியை கொண்டு வந்தது போல், தமிழிலும் மருத்துவக் கல்வியை கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். முழுமையாக தமிழ் மருத்துவக் கல்லூரியை கொண்டு வர முடியாவிட்டாலும், விருப்பப்பட்டவர்கள் தமிழ் வழியில் படிப்பதற்கு புத்தகம் தயாரிப்பதற்காக குழு அமைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.