வேலூர் அக், 17
வேலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ரத்ததான கழகத்தின் 30-ம் ஆண்டு விழா, போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு விழா, ரத்ததான முகாம் ஆகியவை வேலூர் பில்டர்பெட் சாலையில் உள்ள அனிகர் ஆஸ்ரம் பெண்கள் பள்ளியில் நடந்தது.
இவ்விழாவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் திலீபன் தலைமை தாங்கினார் சட்ட மன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா, பள்ளி தலைமையாசிரியை மெர்சி வேதமணி, வரவேற்புக்குழு செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவேற்புக்குழு தலைவர் நாராயணன் வரவேற்றார்.
வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து, ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.