கிருஷ்ணகிரி அக், 17
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக. சார்பில் பொன்விழா நிறைவு மற்றும் 51ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுவது குறித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். சட்ட மன்ற உறுப்பினர் தமிழ்செல்வம், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் சமரசம், முனிவெங்கடப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் சாகுல் அமீது, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், இந்திராணி மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.