கிருஷ்ணகிரி அக், 19
ஓசூரில், காமராஜ் காலனியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ராஜா ராம்மோகன்ராயின் 250-வது பிறந்தநாளையொட்டி பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலத்தை ஓசூர் உதவி ஆட்சியர் சரண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இந்த ஊர்வலம் மீண்டும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில், பள்ளி மாணவிகள், ஆசிரியைகள், நூலகர்கள் மற்றும் ஓசூர் மாநகராட்சி நகர் மன்ற தலைவர் மோசின்தாஜ் நிசார் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.