கிருஷ்ணகிரி அக், 13
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா குன்னத்தூர் கிராமத்தில் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தை சேர்ந்த 2 நடுகற்களும், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதியை ஆண்ட நுளம்பர்களின் பழங்கன்னடப் பொறிப்புள்ள நடுகல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த கல்வெட்டில் கன்னட பேச்சுவழக்கு பயன்படுத்தப்பட்டது. இது உள்ளூர் மக்களால் பயன்பாட்டில் இருந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.