கிருஷ்ணகிரி அக், 12
கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முதல் பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வரை மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நாஞ்சில் ஜேசுதுரை, நாராயணமூர்த்தி, நகர தலைவர் லலித் ஆண்டனி, மாவட்ட துணைத்தலைவர் ரகமத்துல்லா, பொதுச்செயலாளர் அப்சல், நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு இதில் மதிமுக நிர்வாகி செல்வராஜ், திராவிட இயக்கத்தை சேர்ந்த முருகேசன், சிலம்பரசன் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.