ஈரோடு அக், 16
விளைபொருட்களை சந்தைப்படுத்த விவசாயிகளே தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும் என்று மஞ்சள் கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி பேசினார். மஞ்சள் கருத்தரங்கம் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் பொன் மஞ்சள் கருத்தரங்கம் ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் நேற்று தொடங்கியது.
இதன் தொடக்க விழாவுக்கு கருத்தரங்கின் தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இந்த கருத்தரங்கில் இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் சுரேஷ், சங்கர் வானவராயர், பாலசுப்பிரமணியன், நாகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இன்று கருத்தரங்கம் நிறைவுபெறுகிறது.