கரூர் அக், 15
நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கரூர் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 12 மாணவர்கள் குழுவினரும், 12 மாணவிகள் குழுவினரும் என மொத்தம் 24 குழுவினர் கலந்து கொண்டு விளையாடினர். எல்லைமேடு தனியார் பள்ளி முதல் இடத்தையும், குளித்தலை அரசு பள்ளி 2-வது இடத்தையும், நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி 3ம் இடத்தையும் பெற்றது.
ஈ.வே.ரா. பொியார் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், குளித்தலை அரசு பள்ளி 2-வது இடத்தையும், ஜெகதாபி அரசு பள்ளி 3-வது இடத்தையும் பெற்றது. பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.