நெல்லை அக், 14
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்பட்ட மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன. நெல்லை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேலும் இந்த தேயிலை தோட்டங்கள் மலைப்பகுதியில் உள்ளதால் யானை, கரடி, மிளா உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் அவ்வப்போது இங்கு சுற்றி திரிகின்றன.
இந்நிலையில் சுமார் 5 க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் சுற்றி திரிந்துள்ளன. இதனை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.