நெல்லை அக், 14
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகிலுள்ள வடக்கு அரியநாயகிபுரத்தில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.
துணை ஆட்சியர் ரிஷப் முன்னிலை வகித்தார். முகாமில் மொத்தம் 180 மனுக்கள் பெறப்பட்டு 140 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் தையல் எந்திரம், அயன் பாக்ஸ், விவசாய இடு பொருள்கள் மற்றும் விவசாய கருவிகள் ஆகியவை வழங்கப்பட்டது.
முன்னதாக தோட்டக்கலைத்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப் பட்டிருந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
இதில் திட்ட இயக்குநர் பழனி, வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், பாப்பாக்குடி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரன், துணை தாசில்தார் பால சுப்பிரமணியன், யூனியன் சேர்மன் பூங்கோதை சசிகுமார், துணை சேர்மன் மாரிவண்ணமுத்து, யூனியன் நகர் மன்ற தலைவர் சோழைமுடிராஜன், பல துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட 300 பேர் முகாமில் கலந்து கொண்டனர்.