நீலகிரி ஆகஸ்ட், 4
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், தேனி மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளனர்.
#Vanakambharatham#heavyrain#schoolholiday#news