Spread the love

நெல்லை அக், 13

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா இளைய நைனார் குளத்தில் இசக்கி முத்து என்பவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. அங்கு மின்மோட்டார் பழுது ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்காக அவரது மகன் செல்வராஜ் (வயது30) 90 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கினார். மின்மோட்டாரை சரி செய்துவிட்டு கிணற்றில் இருந்து கயிறு வழியே மேலே ஏறி வரும் பொழுது கயிறு அறுந்து கிணற்றுக்குள் விழுந்தார்.

உடனே பக்கத்தில் இருக்கிறவர்கள் பார்த்து வள்ளியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் உடனே வந்து கிணற்றுக்குள் இறங்கி செல்வராஜ்யை கயிறுகட்டிஉயிருடன் மீட்டனர். சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *