நெல்லை அக், 13
நெல்லை நாங்குநேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மஞ்சங்குளம் கொலை வழக்கின் பிரபல எதிரியான திசையன்விளை ஆனைகுடியை சேர்ந்த ராக்கெட் ராஜா என்ற பால விவேகானந்தன் (வயது 40), என்பவர் கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் நாங்குநேரி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்ததன் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், எதிரி ராக்கெட் ராஜா என்ற பால விவேகானந்தன் என்பவர் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.