கன்னியாகுமரி அக், 13
நாகர்கோவிலில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ராகவன், ஸ்டீபன் ஆகியோர் தலைமை தாங்கினர். அமைப்பு செயலாளர் ஜெங்கின்ஸ், வக்கீல் அணி துணைத் தலைவர் சவுந்தர்ராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவை தலைவர் ஜூலியஸ், பொருளாளர் கமலேஷ், இணைச் செயலாளர் சவுமியா, துணைச் செயலாளர் இமாம் பாதுஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.