விருதுநகர் அக், 11
வேலையின்மையை போக்க விருதுநகர் மாவட்டத்தில் தொழில் தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தினார். நடைபயணம் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நடைபயணத்தை நிறைவு செய்து வைத்த இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் வேலையின்மை பிரச்சினை தலையாய பிரச்சினையாக உள்ளது. வறட்சி காரணமாக விவசாயம் பாதித்துள்ள நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள ஜவுளி பூங்காவை உடனடியாக தொடங்குவதுடன், காரியாபட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களை பாதிக்கக்கூடிய சாயப்பட்டறை திட்டத்தை கைவிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலையின்மையை போக்க விருதுநகர் மாவட்டத்தில் தொழில் தொடங்க வேண்டும் என அவர் கூறினார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட செயலாளர் லிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் ராமசாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.