தர்மபுரி அக், 10
தூத்துக்குடி, மங்களூர், மும்பை மற்றும் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு மாதந்தோறும் சரக்கு ரயில்கள் மூலம் உரம், யூரியா வருகிறது. இதை லாரிகளில் பிரித்து அனுப்புவது வழக்கமாகும். அதன்படி தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயில் மூலம் 1,147 டன் யூரியா தர்மபுரி ரயில் நிலையத்துக்கு வந்தது. இவற்றை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் உர கடைகளுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியை வேளாண்மை தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன், ஸ்பீக் யூரியா மாவட்ட விற்பனை அலுவலர்கள் ரகுவரன், கலைச்செல்வம், தர்மபுரி மாவட்ட மொத்த விற்பனையாளர் பார்த்திபன் மற்றும் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.