செங்கல்பட்டு அக், 8
சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்து 300 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அதனைத் தொடர்ந்து ஆயுத பூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஏராளமான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்து பூங்காவில் உள்ள காண்டாமிருகம், நீர்யானை, சிங்கம், புலி, யானை, வெள்ளைப்புலி, மனித குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் மயில் உள்ளிட்ட பறவைகளை பார்த்து ரசித்தனர்.