கன்னியாகுமரி அக், 6
தொடர் விடுமுறையையொட்டி குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். திற்பரப்பு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தொடர் விடுமுறை பள்ளி காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி குமரி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
அதன்படி நேற்று அதிகாலையிலேயே கன்னியாகுமரி, பத்மநாபபுரம், திற்பரப்பு, மாத்தூர் தொட்டிப்பாலம், முட்டம் என அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கடற்கரையில் நேற்று அதிகாலையில் திரண்ட சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். அந்த சமயத்தில் தங்களது செல்போன்களில் படம் பிடித்து உற்சாகம் அடைந்தனர்.