விருதுநகர் அக், 3
வெம்பக்கோட்டையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேரு யுவகேந்திரா சார்பில் 500-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள், இடைவிடாது 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை மூலம் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி தலைமை தாங்கினார். வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய் முன்னிலை வகித்தார். சிலம்பம் சுற்றும் சாதனையை சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி விழிப்புணர்வு பிரசார ஊர்வலத்தை வெம்பக்கோட்டை யூனியன் ஆணையாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார்.