கன்னியாகுமரி செப், 29
திருவட்டார், சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் வேர்க்கிளம்பியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதம் ஆற்றூர் முதல் அழகியமண்டபம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
இந்த சாலையை சீரமைக்கக் கோரி திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் நேற்று வேர்க்கிளம்பி சந்திப்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெகன்ராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால்சிங் தொடங்கி வைத்தார். கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.