Spread the love

நெல்லை செப், 29

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் டி.டி.என். கல்வி குழுமம் சார்பில் நேரு நர்சிங் கல்லூரி, ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வள்ளியூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர், செயலாளர் ஹெலன் தலைமை தாங்கினார். தலைவர் லாரன்ஸ் வரவேற்றார். விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு புதிய கல்லூரியை திறந்து வைத்தார். கல்லூரி நூலகத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்லைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் திறந்து வைத்தார். வள்ளியூர் பங்குதந்தை ஜான்சன் ஆசியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஸ், நெல்லை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்கம் மண்டல இணை இயக்குநர் பாஸ்கரன், ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி முதல்வர் மைதிலி, ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரி முதல்வர் சுப்பிரமணிய பிள்ளை, வேளாண்மை துறை துணை இயக்குனர் ஸ்டேன்லி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அங்கிகாரம் பெற்ற மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல் மற்றும் வணிக வேளாண்மையியல் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளில் இருந்தும் கல்லூரிக்கு இலவச பேருந்து வசதிகள் உள்ளது.
இக்கல்லூரியில் அனுப வமிக்க பேராசிரியைகள், காற்றோட்டமான வகுப்பறைகள், விளையாட்டு அரங்கம், மின் நூலகம், வேலைவாய்ப்பு மையம், முழுமையான பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகள் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *