சேலம் செப், 25
மேலும் பாமக கட்சியின் சேலம் மாநகர மாவட்ட செயலாளர் அருள் தலைமையில் நிர்வாகிகள் பலர் சேலம் ‘தினத்தந்தி’ அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாரின் 87 வது பிறந்தநாள் விழா சேலத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படத்திற்கு பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பாமக மாவட்ட தலைவர் கதிர் ராசரத்தினம், துணை செயலாளர் ராஜமாணிக்கம், மாநில செயற்குழு உறுப்பினர் பூபதி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் விஜய், மாணவர் சங்க செயலாளர் ரஞ்சித், தொழிற்சங்க செயலாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.