சேலம் செப், 26
சேலம் மாவட்டத்தில் கிழக்கு, தெற்கு, மேற்கு, சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர்ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைக்கு உட்பட்டு இயங்குகிறதா என அவ்வப்போது வட்டார போக்குவரத்து மோட்டார்வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அதில், கடந்த 3 மாதங்களில் 800 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் பள்ளி குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றி சென்றது, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது உள்ளிட்ட விதிமுறைகளை மீறி இயக்கிய 95 தனியார் பள்ளி வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதில் அபராதமாக ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் கிடைத்தது. தகுதிச்சான்று இல்லாமல் இயக்கிய 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டி யது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது, போதையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட சாலைவிதிகளை மீறிய பொதுமக்களில் 23 பேரின் உரிமம் 6 மாதம் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.