Spread the love

சேலம் செப்,‌24

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் சேலம் செந்தராப்பட்டியை சேர்ந்த விவசாயி செந்தில் உள்பட விவசாயிகள் பேசும் போது, மண்மாரி ஊராட்சி பகுதிகளில் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கவும், கல்குவாரி அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பூச்சி கொல்லி மருந்து, கல்குவாரி அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினர். காவிரி- சரபங்கா திட்டம் வாழப்பாடியை சேர்ந்த பாலச்சந்திரன் உள்ளிட்ட விவசாயிகள், வாழப்பாடி பகுதியில் விவசாய நிலத்தின் நடுவில் ஏராளமான உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதற்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை மேலும் இழப்பீடு தொகை குறைந்த அளவு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. எனவே முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி கையகப்படுத்திய விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ரவிக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் புருஷோத்தமன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தமிழ்செல்வி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *