கூடலூர் செப், 24
நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் கூடலூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி, ஆல் தி சில்ட்ரன் அமைப்பு ஆகியவை சார்பில் கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மைய மாணவர்களுக்கு போக்சோ சட்டம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. தொழிற்பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜார்ஜ் தலைமை தாங்கினார். ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கினைப்பாளர் அஜித் முன்னிலை வகித்தார். கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுசிலா கலந்து கொண்டு பேசினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பயிற்சி மைய ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியளர்கள், காவல் துறையினர், கல்லூரி மாணவர்கள், தொழிற் பயிற்சிமைய மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.