நெல்லை ஆகஸ்ட், 2
நெல்லை, தென்காசி, குமரி உள்பட தென்மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக வருகிற 4 ம்தேதி வரை அதிக கன மழைக்கான ரெட் அலார்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதன்படி நெல்லையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி அம்பை அடுத்த கல்லிடைக்குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே அம்பை தாசில்தார் ஆனந்த பிரகாஷ் முன்னிலையில் அம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பாக மீட்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து அம்பை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி கப்பதுவது வெள்ள நீரில் இருந்து தப்பிப்பது குறித்து செயல் முறை விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாணவ மாணவிகள் தண்ணீரில் விழுந்த நபரை மீட்கும் கட்சியை செய்முறையாக செய்து அசத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அம்பை தீயணைப்பு துறையினர், பொதுப்பணி துறையினர், பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.