நெல்லை ஆகஸ்ட், 2
நெல்லை மாவட்டம் அம்பையில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பாக அம்பை வனச்சரக அலுவலக்திலிருந்து ஒலிம்பிக் தீபம் ஏந்தி வேட்டை தடுப்பு காவலர்கள் பூக்கடை முக்கு வழியாக சுமார் 2 கி.மீ தூரம் ஓடி வந்து துணை இயக்குனர் அலுவலகத்தில் ஓட்டத்தை நிறைவு செய்தனர்.
இந்த தொடர் ஓட்டத்தின் போது புலிகள் பாதுகாப்பின் அவசியம், வனப்பாதுகாப்பு அவசியம் மற்றும் மரம் நடுதல் அவசியத்தையும் எடுத்துரைத்தனர். மேலும் அம்பை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஊர்வலமாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இது தொடர்பாக அம்பை வனத்துறை அதிகாரி கிருத்திகா IFS, கூறுகையில்,
உலக புலிகள் தினத்தை முன்னிட்டு புலிகள் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டடு வருகிறது. தற்பொழுது களக்காடு-முண்டந்துறை வனப்பகுதியில் சுமார் 16 முதல் 18 புலிகள் உள்ளது. மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் இரு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வனத்துறை சார்பாக பிரத்யேக வாகனம் மூலம் சுற்றுலா பயணிகள் அருவிக்கு அழைத்து செல்ல இருப்பாதவும் தெரிவித்தார்.
மேலும் மோசமான நிலையில் காணப்படும் மாஞ்சோலை, குதிரை வெட்டி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு செல்லும் சாலை விரைவில் புதுப்பிக்கப்படும் என கூறினார்.
#Vanakambharatham#nellai#WorldTigersDay#news