புதுடெல்லி செப், 20
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் பற்றி உள்துறை அமைச்சரிடம் எடுத்துக் கூறினோம். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மக்கள் குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் தேவையான தண்ணீர் கிடைக்கும். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை துரிதமாக செயல்படுத்த கோரிக்கை விடுத்தோம். மேலும் கட்சி குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம் எனக் கூறியுள்ளார்.