ஈரோடு செப், 1
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கொல்லம்பாளையம் அரசு தொடக்க பள்ளிக்கூடத்தில், தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நேற்று தொடக்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். சட்ட மன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இதில் மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன், மகளிர் திட்ட இயக்குனர் கெட்ஸி லீமா அமலினி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.