ஈரோடு செப், 18
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிக்கூடங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு என்கிற திட்டத்தை அறிவித்து கடந்த 15 ம்தேதி மதுரையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
இதனையடுத்து ஈரோடு மாநகராட்சியில் 26, தாளவாடி மலைப்பகுதியில் 38 என 64 அரசு தொடக்கப்பள்ளிக்கூடங்களில் 1முதல் 5-ம் வகுப்பு வரையான 3 ஆயிரத்து 291 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இது பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.