ஈரோடு செப், 16
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் உள்ள பெரியார்-அண்ணா நினைவகம் நேற்று முன்தினம் இரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அரசின் சார்பில் நேற்று அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பிறந்தநாளையொட்டி அண்ணா உரையாற்றிய சொற்பொழிவுகள் ஒலிபரப்பு செய்யப்பட்டன.