Spread the love

கன்னியாகுமரி செப், 16

அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று பள்ளி மாணவர்களுக்கான மிதிவண்டி போட்டி நடைபெற்றது. போட்டியானது நாகர்கோவில் புறவழிச்சாலையில் உள்ள தனியார் உணவகம் முன்பு இருந்து தொடங்கியது. போட்டியை மாநகராட்சி மேயர் மகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் என தனித்தனியாக மொத்தம் 6 பிரிவுகளில் மிதிவண்டி போட்டி நடைபெற்றது.

மேலும் போட்டியில் முதல் 3 இடங்களில் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதாவது 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் அனந்த நாடார்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆதித்யா முதல் பரிசும், கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் விஸ்வா 2-வது பரிசும், நாகர்கோவில் பள்ளி மாணவன் நந்தகுமார் 3-வது பரிசும் பெற்றனர்.

இதேபோல 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் எஸ்.எல்.பி. பள்ளி மாணவன் மஞ்சுநாதன் முதல் பரிசும், மஞ்சு தேவன் 2-வது பரிசு பெற்றனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர். 3-வது பரிசை ராமபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் மதன் பெற்றார். மாணவிகளுக்கு நடத்தப்பட்ட சைக்கிள் போட்டியிலும் முதல் 3 இடத்தை பிடித்த மாணவிகளுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *