Spread the love

நெல்லை செப், 14

நெல்லை மாவட்டம் நவ்வலடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 19 லட்சத்தில் 15 ஆயிரம் செலவில் காத்திருப்போர் அறை மற்றும் ஆக்சிசன்லைன் அமைப்பதற்கான திட்டபணிகள் தொடக்கவிழா நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி திட்டபணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநகர பகுதகளில் உள்ள மருத்துவமனை களில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வசதிகள் கடைகோடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட மருத்துவமனைகளுக்கு இணையாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆக்சிசன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

முன்னதாக நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் வரவேற்று பேசினார். விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ், திசையன்விளை தாசில்தார் செல்வக்குமார், ராதாபுரம் யூனியன் ஆணையாளர் பிளாரன்ஸ் விமலா சமுக சேவகர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *